இந்தியாவில் அதிவேக இண்டர்நெட் வழங்கும் 6 நிறுவனங்கள்

வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (10:47 IST)
அதிவேக இண்டர்நெட் மற்றும் சிறப்பான இண்டர்நெட் திட்டங்களை வழங்குவதில் மற்ற நாடுகள் முன்னணியில் இருந்தாலும் இந்தியாவும் இந்தப் பாதையில் நுழைந்து வருகின்றது. 

 
பல்வேறு இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களும் சீரான வேகம் கொண்ட இண்டர்நெட் சேவைகளை நல்ல விலையில் வழங்கத் துவங்கியுள்ளனர். அதில் சில உங்கள் கவனத்திற்கு...
 
ஆக்ட் ஆக்ட் ஃபைபர்நெட்: 
 
இந்தியாவின் முன்னணி இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனமாக இருக்கின்றது. ஆக்ட் இண்டர்நெட் குறைந்த விலையில் சிறப்பான சேவையை வழங்கி வருகின்றது. இந்நிறுவனம் ரூ.1,999 விலையில் நொடிக்கு சுமார் 100 எம்பி வேகம் கொண்ட சேவையை வழங்குகின்றது.
 
ஏர்டெல் பிராட்பேண்ட் ஆக்ட்: 
 
ஏர்டெல் நிறுவனத்தில் ரூ.2,399 செலுத்தும் போது அதிகபட்சம் நொடிக்கு 40 எம்பி என்ற வேகத்தில் வழங்கப்படுகின்றது. ஆனாலும் மற்ற திட்டங்களில் வேகம் நொடிக்கு 1 எம்பி வரை வழங்கப்படுகின்றது.
 
யு பிராட்பேண்ட்: 
 
நாட்டில் மற்ற நிறுவனங்களுக்கு இணையான வேகத்தில் இணையச் சேவைகளை யு பிராட்பேண்ட் வழங்குகின்றது. ரூ.1,724 செலுத்தும் போது நொடிக்கு 100 எம்பி என்ற வேகத்தில் இண்டர்நெட் சேவையை பெற முடியும்.
 
டிக்கோணா: 
 
இந்தியாவில் வளர்ந்து வரும் இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களில் டிக்கோணாவும் ஒன்று. இந்நிறுவனத்தின் இண்டர்நெட் வேகமானது நொடிக்கு 2 எம்பி முதல் 4 எம்பி வரை வழங்கப்படுகின்றது. அதிகபட்சமாக ரூ.950 செலுத்தும் போது 80 ஜிபி வரை பெற முடியும்.
 
ரிலையன்ஸ் பிராட்பேண்ட்: 
 
இது ரிலையன்ஸ் பிராட்பேண்ட் சேவையாகும். அதிகபட்சம் நொடிக்கு 12 எம்பி வேகம் கொண்ட இண்டர்நெட்டை வழங்குகின்றது. இதற்கு மாதம் ரூ.999 என்ற கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
 
எம்டிஎன்எல் பிராட்பேண்ட்: 
 
இந்நிறுவனம் நொடிக்கு 100 எம்பி என்ற வேகத்தினை ரூ.6,999 என்ற விலைக்கு வழங்குகின்றது. இதுவும் மற்ற நிறுவனங்களை விட அதிக கட்டணம் ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்