50 சதவிகிதம் கட்டணச் சலுகை தருகிறது டைகர்ஏர் விமான நிறுவனம்

திங்கள், 28 செப்டம்பர் 2015 (14:38 IST)
டைகர்ஏர் விமான நிறுவனம் தன் கட்டணத்தில்  50 சதவிகிதம் சலுகையை அறிவித்திருக்கிறது.


 
சிங்கப்பூரைச் சேர்ந்த டைகர்ஏர் விமான நிறுவனம் சில குறிப்பிட்ட இடத்திலிருந்து புறப்படும் பயணிகளுக்கு தனது கட்டணத்தில் 50 சதவிகிதம் சலுகையை அறிவித்திருக்கிறது.
 
பெங்களூர்,சென்னை,ஹைதராபாத்,கொச்சி,திருச்சிராப்பள்ளி மற்றும் லக்னோ ஆகிய இடங்களிலிருந்து வெவ்வேறு இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
இந்தச் சலுகை,  www.tigerair.com என்ற இணையதளத்தில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 8 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முக்கியமான சில பண்டிககைகள் இந்த தேதியில் வருவதால், இந்தச் சலுகை அளிக்கப்படுவதாக, இந்த விமான நிறுவனத்தின் இயக்குனர்  டெ யிக் சான் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்