நிறுவனங்களின் ஒப்புதல் இன்றி ஓய்வூதியம் பெற புதிய திட்டம்

சனி, 20 ஆகஸ்ட் 2016 (17:59 IST)
ஓய்வூதிய நிதியை நிர்வகித்து வரும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) பிஎப் சந்தாதாரர்களுக்கு புதிய பொதுக் கணக்கு எண்ணை (யுஏஎன்) அடிப்படையாக கொண்ட 10டி படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


 
 
இதன் மூலம் நிறுவனங்களின் ஒப்புதல் இல்லாமலேயே சந்தாதாரர்கள் தங்களது ஓய்வூதிய தொகையை பெற்றுக் கொள்ளமுடியும். தற்போதைய நிலையில் ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் 1995-ன் கீழ் சந்தாதாரர்கள் அவர்களது ஓய்வு கால பலன்களை பெறுவதற்கு நிறுவனங்களின் ஒப்புதல் பெறவேண்டும்.
 
தற்போது சந்தாதாரர்களின் பொதுக் கணக்கு எண்ணைக் அடிப்படையாக கொண்டு 10-டி யுஏஎன் என்ற புதிய படிவம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக இபிஎப்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
 
மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்த புதிய படிவத்துக்கு நிறுவனங்களின் ஒப்புதல் தேவையில்லை. நேரடியாக இபிஎப்ஓ அலுவலகம் சென்று விண்ணபிக்கலாம்.
 
மேலும் இபிஎப் சந்தாதார்கள் தங்களது ஓய்வூதிய பலன்களை உயர்த்திக் கொள்ளுவதற்கு வாய்ப்பையும் தற்போது வழங்கி வருகிறது. 58 வயதுக்கு மேல் பங்களிப்பு செய்தோ அல்லது பங்களிப்பு இல்லாமலேயே தங்களது ஒய்வூதிய பலன்களை 58 வயதிலிருந்து 60 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் பெற முடியும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்