குறுகிய கால கடன் வட்டி விகிதம் குறித்து ரகுராம் ராஜன் விளக்கம்

செவ்வாய், 2 பிப்ரவரி 2016 (14:05 IST)
வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில் (ரெப்போ) மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அறிவித்துள்ளது


 
மும்பையில் கடன் கொள்கை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கலந்துகொண்டார். 
 
இதைத் தொடர்ந்து, வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் 6.75 ஆக தொடரும் என்றும் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
 
மேலும், "பணப்புழக்கத்தை சரிசெய்யும் வசதிக்கான வட்டி விகிதம் 5.75 சதவீதமாகவும், குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் 7.75 சதவீத அளவிலே இருக்கும்.
 
ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதம் நிலையில் மாற்றம் இல்லாமல் இருக்கிறது." என்றும் ரகுராம் ராஜன் கூறினார் என்பது குறிப்பிடத்க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்