ரூ.2,000-த்துக்கு குறைவான பணப்பரிமாற்றம்; அபராதம்: எஸ்பிஐ கார்டு அதிரடி!!

புதன், 19 ஏப்ரல் 2017 (10:05 IST)
காசோலைகள் மூலம் ரூ.2,000-த்துக்கு குறைவாக பணம் செலுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என எஸ்பிஐ கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.


 
 
எஸ்பிஐ வங்கியின் கூட்டு நிறுவனமான எஸ்பிஐ கார்டு நிறுவனம், இந்தியா முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது.
 
சமீபத்தில் ரூ. 2000-க்கு குறைவான பணத்தை காசோலை மூலம் செலுத்தினால் ரூ.100 வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ கார்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 
 
சில குற்றச்சாட்டுகள் காரணமாக, அதை தவிர்க்க காசோலை பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டாம் என வங்கிகள் முடிவு செய்துள்ளன. இதனால் இந்த அபராத முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
தற்போது எஸ்பிஐ கார்டு நிறுவனத்தின் கட்டண அறிவிப்பு எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது என்றும், எஸ்பிஐ தவிர பிற வங்கிகளின் காசோலைக்கு கட்டணம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்