5ஜி ஸ்பீட் இண்டர்நெட்: ஜப்பானில் அசத்திய சாம்சங்!!

சனி, 2 டிசம்பர் 2017 (15:42 IST)
பிரபல மொபைல் நிறுவனமான சாம்சங் புல்லட் ரயில்களில் தொழிநுட்ப வசதிகளை மேம்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருகிறது. 
 
சாம்சங் நிறுவனம் கேடிடிஐ உடன் இணைந்து, ஓடும் புல்லட் ரயிலில் 5ஜி இண்டர்நெட் ஸ்பீட் அளிக்க முயற்சித்து வருகிறது. இதற்காக ஜப்பானும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 
 
இந்நிலையில் அடுத்து ஓடும் ரயிலில் அதிவேக 5ஜி இண்டர்நெட் சேவையை பெறும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளது. இதற்கு முன்னர் மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்கும் ரயிலில், நொடிக்கு 1.7 ஜிபி இணைய வேகத்தை பெறும் முயற்சி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. 
 
இந்த சோதனைகள் கடந்த அக்டோபர் 17 முதல் 19 வரை, டோக்கியோ அருகில் உள்ள சைதமா நகரில் நடத்தப்பட்டன. இதில் சாம்சங் நிறுவனத்தின் 5ஜி சேவை பயன்படுத்தப்பட்டது. 
 
இந்த சேவையில் 5ஜி ரவுட்டர் (CPE Router), ரேடியோ சேவை (5G Radio), வொர்ச்சுவல் ரேன் (Virtual RAN) உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. சோதனை ஓட்டத்தின் போது 8k வீடியோ டவுன்லோட் செய்து, 4k வீடியோ அப்லோட் செய்யப்பட்டது. இது 5ஜி செயல்பாட்டில் மிகமுக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்