வங்கி சேமிப்பு கணக்கு: வாரம் 50,000 ரூபாய்!!

வியாழன், 9 பிப்ரவரி 2017 (10:41 IST)
வங்கிச் சேமிப்பு கணக்கில் 24,000 ரூபாயாக இருந்த பணம் எடுக்கும் உச்ச வரம்பு, தற்போது 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


 
 
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. 
 
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதியிலிருந்து நடப்புக் கணக்கில் பணம் எடுக்க இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது. 
 
ஆனால் சேமிப்புக் கணக்கில் வாரம் 24,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்து வந்தது. இந்நிலையில் சேமிப்பு கணக்கில் இனி வாரம் தோறும் 50,000 ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
வரும் மார்ச் 13 ஆம் தேதி முதல் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி, எவ்வளவு வேண்டுமானாலும் சேமிப்புக் கணக்கில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்