தனியார் நிறுவன ஊழியர்களே.... உங்களுக்கு ஜியோ சிம் இலவசம்: ரிலையன்ஸ் அதிரடி

சனி, 27 ஆகஸ்ட் 2016 (11:25 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சந்தையில் சிம்மை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே தங்களது நிறுவன ஊழியர்கள் மட்டும் இல்லாமல், கணிசமான வாடிக்கையாளர்களையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அதிரடி வியாபார திட்டத்தை  முன்வைத்துள்ளது.


 
 
2.5 மில்லியன் வாடிக்கையாளர்களை 20 மில்லியன் வாடிக்கையாளர்களாக அதிகரிக்க இலவச 4ஜி சிம் கார்டு உடன் மொபைல் போன்களை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். அதுமட்டும் இல்லாமல் சாம்சங், பானாசோனிக், எல்ஜி, மைக்ரோமாக்ஸ் போன்ற அனைத்து மொபைல் நிறுவனங்களுடனும் ஒப்பந்தத்தில் உள்ளது.
 
சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள பல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஜியோ இலவச சிம் அட்டையை வழங்க உள்ளது. இந்த இலவச சிம் கார்டு மூலமாக 90 நாட்களுக்கு இலவச அழைப்புகள் மற்றும் இலவச 4ஜி தரவை ஜியோ முன்னோட்ட ஆஃபராக அளிக்கிறது.
 
ஃபோன்களுடன் இலவச சிம்களை பெறும் போது அருகில் உள்ள ரிலையன்ஸ் ஸ்டோர்களில் புகைப்படம், அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை அளித்து எளிதாக இந்த சேவைகளைப் பெற முடியும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்