குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (17:21 IST)
வங்கிகள் வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
வங்கிகள் வாங்கும் குறுகிய காலக் கடனுக்கான (ரெபோ) விகிதம் 8 சதவீதமாக நீடிக்கும் என்று மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி கடன் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், வங்கிகளின் ரொக்கக் கையிருப்பு விகிதமான சி.ஆர்.ஆர். விகிதத்தை எந்த மாற்றமும் இல்லாமல், 4.0 சதவீதத்தில் நீடிக்கச் செய்துள்ளது ரிசர்வ் வங்கி.
 
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு ரிசர்வ் வங்கி வெளியிடும் இரண்டாவது கடன் கொள்கை ஆய்வு இன்று மும்பையில் ரிசர்வ் வங்கியில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
 
தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு போன்ற அத்யாவசிய பொருட்களின் இவற்றின் விலைகளும் உயர்ந்துள்ளன. பருவ மழை பெய்வதில் தாமதம் உள்ளிட்ட சில காரணங்களால் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. எனினும் உணவு பொருட்களுக்கான பணவீக்கம் 8 சதவீதமாக நீடிக்கிறது. இதனை படிப்படியாக, 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் 6 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், வங்கிகளின் கட்டாய இருப்பு விகிதம் 0.5 சதவீதமும் குறைத்து 22 சதவீதமாக இருக்கும். வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமாக நீடிக்கிறது. விலைவாசி உயர்வு காராணங்களால், ரிசர்வ் வங்கியின் மறு சீராய்வு மூலமான மாற்றங்கள் பெரிதாக ஏற்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்