ஜியோ போனில் மற்ற நெட்வொர்க் சிம் கார்ட்டை பயன்படுத்த முடியுமா??
புதன், 26 ஜூலை 2017 (14:46 IST)
ரிலையன்ஸ் நிறுவனம் 4ஜி வசதி கொண்ட ஜியோ போனினை அறிமுகம் செய்தது. இந்த போன் குறித்த பலரின் சந்தேகம் எந்த சிம் கார்ட்டை இதில் பயன்படுத்த வேண்டும் என்பதுதான்.
புதிய ஜியோ போன் இலவசமாக வழங்கப்படுவதாகவும், ரூ.1500 செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த தொகை திரும்ப வழங்கப்படும் என்பது குற்ப்பிடத்தக்கது.
ஜியோ போன் பயன்படுத்த விரும்புவர்கள் பலருக்கும் உள்ள சந்தேகம் ஜியோ போனில் பிற நெட்வொர்க் சிம் கார்ட்டை பயன்படுத்தலாமா என்பதுதான்.
ஏற்கனவே ஜியோ சிம் வைத்திருப்போர் அந்த சிம் கார்டையே புதிய ஜியோ போனிலும் பயன்படுத்தலாம், ஆனால் புதிய போனில் பயன்படுத்த ரூ.153 திட்டத்திற்கு மாற வேண்டும்.
முக்கியமாக ஜியோ போனில் மற்ற நெட்வொர்க் சிம் கார்டுகள் வேலை செய்யாது. ஏர்டெல், ஐடியா, பிஎஸ்என்எல், வோடோபோன் போன்ற எந்த நிறுவனங்களின் சிம் கார்டுகளையும் ஜியோ போனில் பயன்படுத்த முடியாது.