அம்பானியால் அப்செட்டான பிவிஆர் மற்றும் ஐனாக்ஸ்!

புதன், 14 ஆகஸ்ட் 2019 (15:59 IST)
முகேஷ் அம்பானி வெளியிட்ட புதிய திட்டம் ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது பிவிஆர் மற்றும் ஐனாக்ஸ் தியேட்டர்கள். 
 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதோடு சில எதிர்பாராத அறிவிப்புகளை வெளியிட்டார்.  
 
அதில், ஜியோ ஃபைபர் சேவையின் கீழ் ஒரு திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் அதே நாளில் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தே திரைப்படங்களைப் பார்க்கக்கூடிய பிரீமியம் சேவையையும் ஒன்று. இந்த சேவை 2020 ஆம் ஆண்டு தொடங்கப்படும் எனவும் அறிவித்தார். 
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது பிவிஆர் மற்றும் ஐனாக்ஸ். இவ்விரு தியேட்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒரே நேரத்தில் தியேட்டர்கள் மற்றும் ஜியோவின் வரவிருக்கும் சேவை என்கிற இருவேறு தளங்களில் ஒரு திரைப்படம் வெளியாகும் பட்சத்தில், ஒப்புக்கொள்ளப்பட்ட பிரத்தியேக தியேட்டரிக்கல் விண்டோ பரஸ்பரமானது உடைந்து போகும் வாய்ப்புள்ளது என கூறி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 
 
தியேட்டரிக்கல் விண்டோ என்பது ஒரு படம் முடிவடையும் வரையிலாக, அந்த திரைப்படம் OTT, DVD மற்றும் DTH போன்ற தளங்களை அடையாது என்பதை உறுதி செய்வதாகும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்