1½ லட்சம் டன் பருப்புவகைகளை கொள்முதல் செய்து இருப்பு வைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வியாழன், 10 டிசம்பர் 2015 (11:11 IST)
பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த 1½ லட்சம் டன் பருப்புவகைகளை கொள்முதல் செய்து, இருப்பு வைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


 

 
பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த, 1½ லட்சம் டன் பருப்புவகைகளை கொள்முதல் செய்து இருப்பு வைக்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சவை கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
 
இந்த பருப்புவகைகள், சந்தை விலையில் வாங்கப்படும். இது நடப்பு ஆண்டிலேயே இருப்பு வைக்கப்படும்.
 
பருப்பு விலை கடுமையாக உயரும்போது இவை சந்தைக்கு அனுப்பப்படும். பருப்பு விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட கீழே இறங்கினால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கே பருப்பு வாங்குவது என்றும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 
மேலும், தேவைப்பட்டால், பருப்பை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்