வெங்காய விலை : ஒரே வாரத்தில் 40% உயர்வு

வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (13:04 IST)
பருவம் கடந்து மழை பெய்ததால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரே வாரத்தில் வெங்காய விலை 40% உயர்ந்துள்ளது. 

ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.575 முதல் ரூ.801 வரை இருந்தது. ஆனால், 17ஆம் தேதி ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.750 முதல் ரூ.1011 வரை அதிகரித்துள்ளது.
 
இதனால், தற்போது சில்லரை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனையாகிறது. 
 
இது மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்