இன்று OnePlus 8 ஸ்பெஷல் சேல்: எங்கு, எப்போ தெரியுமா??
திங்கள், 18 மே 2020 (13:05 IST)
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிரப்பு சலுகையை இன்று துவங்குகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த மாதம் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை ஆன்லைனில் அறிமுகம் செய்தது. அதில், ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மே 29 ஆம் தேதி அமேசான் மற்றும் விற்பனை மையங்களில் விற்பனைக்கு வரும் என அறிவித்தது.
ஆனால் இதற்கு முன்னர் இன்று 2 மணிக்கு சிறப்பு விற்பனை அமேசான் மூலம் செய்யப்பட இருக்கிறது. ஒன்பிளஸ் 8 சீரிஸ் விலை ரூ. 41,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.