சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ:216க்கு குறைந்து, ஒரு சவரன் ரூ: 23,936க்கு விற்பனையாகிறது.
ஐரோப்பா யூனியனில் இருநது பிரிட்டன் விலகியதை அடுத்து தங்கத்தின் விலை சரியான நிலைக்கு வாராமல் இருக்கிறது. இதனால் ஒரு நாள் அதிக ஏற்றத்துடனும், ஒரு நாள் அதிக குறைவுடனும் காணப்படுகிறது.
கடந்த வாரம் ஒரு சவரன் ரூ:24,152க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ:216 குறைந்து ரூ:23,936க்கு விற்கப்படுகிறது.