ஏர்டெல் ரூ.33, வோடோபோன் ரூ.25 ஒரு மாத கால டேட்டா!!! எப்படி பெறலாம்?

புதன், 5 அக்டோபர் 2016 (10:45 IST)
ரிலையன்ஸ் ஜியோவிற்கு மிகப்பெரிய போட்டியாளர்களாக ஏர்டெல், வோடோபோன் நிறுவனம் திகழ்கிறது. இந்நிறுவனங்களுக்கு இடையே உள்ள போட்டியால் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகின்றனர்.

 
ஏர்டெல் ரூ.33 டேட்டா பேக்:
 
ஏர்டெல் பயனர் என்றால், ரூ.33/-ல் முழு மாதமும் மொபைல் 2ஜி/ 3ஜி/ 4ஜி டேட்டாவை பெற முடியும்.
 
ஏர்டெல் வழங்கும் ரூ.33/- திட்டத்தின் கீழ் பயனர்கள் 85எம்பி அளவிலான தரவை பெறுவர் அதாவது இது ரூ.29/- திட்டத்தை விட 10எம்பி அதிக தரவாகும். ஒரு மாதம் முழுவதும் நீடிக்கும்.
 
வழிமுறை:
 
1. ஏர்டெல் எண்ணில் இருந்து *56733# என்ற எண்ணிற்கு டயல் செய்யவும். பின்னர் ரூ.33 திட்டத்தை தேர்வு செய்யவும்.
 
2. பின்னர், ஏர்டெல் மொபைலில் 'ரீசார்ஜ் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது' என்ற ஒரு டெஸ்ட் மெசேஜ் உடன் ஏர்டெல் வழங்கும் ஒரு மாத கால அளவிலான டேட்டாவையும் பெறலாம்.
 
வோடோபோன் ரூ.25 டேட்டா பேக்:
 
வோடோபோனின் இந்த வாய்ப்பின்படி, ரூ.250/- செலவில் முதலில் வோடாபோனின் 1 ஜிபி அளவிலான 4ஜி தரவு, பின் இலவசமாக 9 ஜிபி அளவிலான தரவு என மொத்தம் 10ஜிபி அளவிலான 4ஜி தரவை ரூ.250/-க்கு அதாவது 1ஜிபி ரூ.25/- என்ற விலையில் பெற முடியும்.
 
இந்த வோடபோன் வழங்கும் 4ஜி வாய்ப்பை டிசம்பர் 31, 2016 வரை மட்டுமே வேலிடிட்டி கொண்டது. இந்த 9 ஜிபி இலவச 4ஜி தரவை குறிப்பிட்ட வேலிடிட்டி தேதிக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
ஆனால் இலவசமாக கிடைக்கும் 9 ஜிபி அளவிலான டேட்டாவை இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயன்படுத்த முடியும்.
 
இந்த வாய்ப்பின் ஒரு பகுதியாக, வோடபோன் சந்தாதாரர்கள் திரைப்படங்கள், தொலைக்காட்சி, மற்றும் இசையை வோடபோன் ப்ளேவில் இலவச சந்தாவாக பெற முடியும். 

வெப்துனியாவைப் படிக்கவும்