நோக்கியா ஏர்டெல் கூட்டணி: 5G-க்கு அடித்தளம்; டெலிகாம்-ல் அதிரடி மூவ்!!

வியாழன், 2 மார்ச் 2017 (13:12 IST)
நோக்கியா மற்றும் டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் இணைந்து 5G தொழில்நுட்பம் மற்றும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் சாதனங்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

 

 
 
5G மற்றும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் செயலிகள் மக்களின் வாழ்க்கை தரத்தை அடியோடு மாற்றும் தன்மை கொண்டவை. அந்த வகையில் நோக்கியாவுடன் இணைந்து இவற்றை ஏர்டெல் நெட்வொர்க் பிரிவு வழங்கவுள்ளது.
 
5G நெட்வொர்க்களை பயன்படுத்தி ஸ்மார்ட் நகரங்கள், கனெக்ட்டெட் வாகனங்கள் உள்ளிட்ட மேலும் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் காண முடியும். 
 
முன்னதாக நோக்கியாவுடன் இணைந்து 5G தொழில்நுட்பம், இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் உள்ளிட்ட சேவைகளை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு செய்தது. 
 
ஆனால், தற்போது ஏர்டெல், பி.எஸ்.என்.எல்-ஐ பின்னுக்கு தள்ளி அந்த ஒப்பந்ததை மேற்கொண்டுள்ளது. 
 
இதே போல், ஜியோ நிறுவனம் சாம்சங் உடன் இணைந்து, 5ஜி சேவையை இந்தியாவில் தொடங்க முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்