5G நெட்வொர்க்: நோக்கியா, ஏர்டெல், பிஎஸ்என்எல் இணைந்து அதிரடி!!

திங்கள், 10 ஏப்ரல் 2017 (10:52 IST)
நோக்கியா நிறுவனம் உலக மொபைல் சந்தையில் ரீஎன்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறது. 


 
 
இந்நிலையில், நோக்கியா நிறுவனம் ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் 5G இணைப்பை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
 
இதை உறுதிபடுத்த நோக்கியா, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
 
5G சேவையானது 2020 வளர்ந்த நாடுகளிலும் மற்றும் 2022-ல் இந்தியாவிலும் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்தியாவில் 4G நல்ல நிலையில் உள்ளதால் 5G சேவை குறித்து அதிக ஆர்வம் முளைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்