4000 எம்ஏஎச் பேட்டரி திறன்: என்ட்ரி லெவலிலேயே அசத்தும் நோக்கியா 2!!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (19:46 IST)
நோக்கியா தனது அடுத்த மாடலான நோக்கியா 2 ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாக இது தயாராகி வருகிறது.  


 
 
தற்போது நோக்கியா 2 பற்றிய சில செய்திகள் வெளியாகியுள்ளன. வெளியான தகவலில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது நோக்கியா 2 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளதுதான்.
 
இதுவரை வெளியானதில் அதிக திறனுள்ள பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் பேக்கப் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மேலும், 5.0 இன்ச் எச்டி 720 பிக்சல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 212 சிப்செட் மற்றும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. 
 
இதன் விலை ரூ.9,499-க்கு குறைவாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எதும் அதிகாரப்பூர்வமாக வெளியானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்