பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றம் இல்லை: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

ஞாயிறு, 8 நவம்பர் 2015 (17:14 IST)
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையிலும், நாடு முழுவதும் அதன் விற்பனை விலையில் தற்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை என தற்போது எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.


 
 
இந்நிலையில், மத்திய அரசு நிதிச்சுமையைக் காரணம் காட்டி பெட்ரோல் மற்றும் டீசல் மீது உற்பத்தி வரியை உயர்த்தியுள்ளது. வரி உயர்வு சுமையை எண்ணெய் நிறுவனங்களே தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது.
 
மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ளதன் படி பெட்ரோலுக்கு ஒரு ரூபாய் 60 காசும், டீசலுக்கு 40 காசும் உயர்த்தப்படுகிறது என்று மத்திய கலால் மற்றும் சுங்க வரி ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த வரி உயர்வு மூலம் அரசுக்கு கூடுதலாக 3 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்