வீடு வாங்க வேண்டுமா? நல்ல திட்டம் வருது கொஞ்சம் பொறுங்க!!

வியாழன், 16 மார்ச் 2017 (09:23 IST)
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து வீடு வாங்க விரும்புபவர்கள், இனி 90 சதவீத பணத்தை எடுத்துக் கொள்ளாம். 


 
 
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பங்காரு தத்தாத்ரேயா, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து வீடு வாங்க விரும்புபவர்கள், இனி 90 சதவீத பணத்தை எடுத்துக் கொள்ளும் வகையில் சில திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளார்.
 
இந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, மாதத் தவணையை வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்திவிடலாம். இதற்கான திருத்தமும் விரைவில் கொண்டு வரப்படும் என் தெரிவித்துள்ளார். 
 
வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இருக்கும் சந்தாதாரர்கள் இந்தப் பணத்தை எடுக்க 10 பேர் கொண்ட ஒரு கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்