ரூ.5000-த்திற்கு மேல் இனி எல்லாம் மின்னணு பரிமாற்றம் தான்!!

புதன், 7 டிசம்பர் 2016 (10:29 IST)
இனி 5000 ரூபாய்க்கும் அதிகமான அனைத்து அரசு அமைப்புகளின் பரிமாற்றமும் மின்னணு முறையில் செய்யப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 


 
 
ஆகஸ்ட் மாதம் இதன் அளவை 10,000 ரூபாயாக நிர்ணயம் செய்தது தற்போது டிஜிட்டல் முறை பரிமாற்றத்தின் அளவைப் பாதியாகக் குறைத்துள்ளது.
 
இனி அரசு அமைப்புகளின் விற்பனையாளர்கள், சப்ளையர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்க வேண்டிய தொகை 5000 ரூபாயைத் தாண்டினால் மின்னணு முறையில் மட்டுமே பணப் பரிமாற்றம் செய்யவேண்டும். பணமாக அளிக்கக் கூடாது. 
 
இந்தியாவில் டிஜிட்டல் பரிமாற்ற முறையை இப்புதிய அறிவிப்பின் மூலம் அரசு அமைப்புகள் மத்தியில் 100 சதவீதம் நடைமுறைக்குக் கொண்டு வரும் திட்டமாக இது அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்