மொபைல் டேட்டா கட்டணங்கள் 15 - 20 சதவீதம் குறைய வாய்ப்பு!

திங்கள், 23 நவம்பர் 2015 (16:01 IST)
ரிலையன்ஸ் ஜியோ வரவால் இந்தியாவில் செல்போன் டேட்டா கட்டணங்கள் 15 முதல் 20 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக ஃபிட்ச் தெரிவித்துள்ளது.
 

 
இது குறித்து உலகளவிலான மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய செல்போன் சந்தையில், அடுத்த நிதியாண்டில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கால் பதிக்க உள்ளது.
 
அதன் விளைவாக நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி உருவாகும். இதன் மூலம் கட்டணம் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளது.
 
4 முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் கடும்போட்டியால் அவற்றின் லாப விகிதங்கள் குறையும் என்றும் ஃபிட்ச் கூறியுள்ளது.
 
2015ம் ஆண்டில் ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்தும் அந்நிறுவனங் களுக்கு மாதம் சராசரியாக 170 ரூபாய்வருமானம் கிடைத்து வருவதாகவும் வரும் ஆண்டில் இது 160 ஆக குறையும் என்றும் அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதே சமயம் மலிவு விலையிலான ஸ்மார்ட் போன்கள் அதிகளவில் விற்பனையாவதால், டேட்டா இணைப்பை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதன் மூலம், மொத்த வருவாயில் டேட்டா இணைப்பின் பங்களிப்பு 25 முதல் 27 சதவீதம் [தற்போது 18 -20 சதவீதம்] வரை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்