பணத்தட்டுபாட்டில் இருந்து தப்பிய எம்என்சி: எப்படி??

வெள்ளி, 25 நவம்பர் 2016 (12:11 IST)
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தத் முதல் இந்தியாவில் சரிபாதி மக்கள் ஏடிஎம் மற்றும் வங்கி வாசலில் நின்றுகொண்டு இருக்கின்றனர். 


 
 
இத்தகைய பாதிப்புகள் இருந்த நிலையில் இன்போசிஸ், பிளிப்கார்ட், மஹிந்திரா போன்ற நாட்டின் முன்னணி நிறுவனங்களின் ஊழியர்கள் மட்டும் இதில் எஸ்கேப் ஆனார்கள்.
 
எம்என்சி நிறுவனங்கள்:
 
மக்கள் மத்தியில் நிலவும் பணத் தட்டுப்பாடு பிரச்சனை தனது ஊழியர்களையும் பாதிக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு பல முக்கியப் பணிகளைச் செய்துள்ளது இந்த நிறுவனங்கள்.
 
வங்கிகளுடன் கூட்டு:
 
இந்த நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்குச் சேவை அளிக்கும் பொருட்டு அவர்களிடம் இருக்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளுடன் இணைந்து ஹெல்ப் டெஸ்க் அமைத்துள்ளது. 
 
இதுமட்டும் அல்லாமல் நிறுவனங்களின் தலைமை அலுவலகத்தில் புதிதாக ஏடிஎம் இயந்திரங்கள், தற்காலிக பணம் எடுக்கும் சேவை என அனைத்தையும் வழங்கியுள்ளது.
 
ஊழியர்களுக்குச் சிறப்பான சேவை அளித்த நிறுவனங்களில் இன்போசிஸ், பிளிப்கார்ட், மேக் மை டிரிப், யாத்ரா, மஹிந்திரா & மஹிந்திரா, கோத்ரெஜ், EY, வோடபோன், எரிக்சன் இந்தியா, சாயோஸ் மற்றும் மாரிகோ ஆகியவை இடம் பெற்றுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்