ஸ்மார்ட்போனில் இருந்து வெளியாகும் ப்ளு ரேஸ் பற்றி தெரியுமா??

வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (14:08 IST)
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் வரவு அனைவரது நேரத்தினை விழுங்கி வருகின்றது. இவற்றால் இரவு நேர தூக்கத்தை துலைத்தவர்கள் பலர்.


 
 
ஸ்மார்ட்போனில் மற்றும் டாப்டாப்களில் இருந்து நீல ஒளி வெளியாகும். இந்த ஒளி இன்சோம்னியாவை உறுவாக்கும். இன்சோம்னியா என்பது தூக்கமின்றி இன்றி தவிப்பது.
 
பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் இதற்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது. அதாவது இரவு நேரத்தில் ஸ்மார்ட்போனால் தூக்கத்தை இழந்தவர்களுக்கு விஷேச கண்ணாடி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
 
இந்த கண்ணாடி கைப்பேசிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளியை உறுஞ்சக்கூடியது. இவ்வாறு செய்யப்படுவதால் குறித்த நேரத்திற்கு பின்னர் தானாகவே தூக்கம் தூண்டப்படுகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்