ரூ.1,333-க்கு தேசிய கொடி அச்சிடப்பட்ட போன்களை அறிமுகம் செய்த லாவா!

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (14:58 IST)
இந்தியாவின் தேசிய கொடி அச்சிடப்பட்டு உள்ள ஸ்மார்ட்போன்களை லாவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 
 
ஆம், லாவா இசட்61 ப்ரோ, லாவா ஏ5 மற்றும் லாவா ஏ9 மாடல்களின் Proudly Indian எடிஷன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 74 வது இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் விரைவில் ஆஃப்லைன் விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் விற்பனைக்கு வரும் என லாவா நிறுவனம் அறிவித்துள்ளது.  
 
விலை விவரம்: 
லாவா இசட்61 ப்ரோ மாடல் விலை ரூ. 5,777
லாவா ஏ5 மாடல் விலை ரூ. 1,333 
லாவா ஏ9  மாடல் விலை ரூ. 1,574 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்