ஜெயின் ஹிட்ஸ் நிறுவனத்தின் கேபிள் டிவி சேவைகள் - சென்னையில் முதல் சந்திப்பு

புதன், 16 ஜூலை 2014 (16:24 IST)
ஹிட்ஸ் (HITS) அடிப்படையிலான டைரக்ட் டு நெட்வொர்க் (DTN) சேவையை இந்தியாவில் வழங்குகிற முதல் மற்றும் ஒரே நிறுவனமான ஜெயின் ஹிட்ஸ், சென்னையில் நடத்திய அதன் முதல் மாநில தொழில் முறை சந்திப்பு கூட்டத்திற்கு ஏராளமான எண்ணிக்கையில் உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்களைக் (LCO) கவர்ந்திழுத்தது. 
 
மாநில அரசுக்கு சொந்தமான அரசு கேபிள் வலையமைப்பிற்கு DAS உரிமம் வழங்குவது தொடர்பாக மத்திய அரசோடு நிலவுகின்ற சர்ச்சை விரைவில் தீர்க்கப்படுவதற்கான எந்த அறிகுறியும் தென்படாத நிலையில், கேபிள் ஆபரேட்டர்கள் ஜெயின் ஹிட்ஸ் செயல் தளத்தில் ஆர்வம் காட்டியதோடு தங்களது வலையமைப்பை டிஜிட்டல் மயமாக்குவது மீதான தங்களது தீர்மான முடிவையும் இதில் வெளிப்படுத்தினர். டிஜிட்டல் புரட்சியின் ஆதாயங்களைக் கைதவற விட்டுவிட அவர்கள் விரும்பாததும் மற்றும் வளர்ச்சி வாய்ப்பு மிக்க இந்தத் தொழிலை நடத்துவதற்குச் சட்டப்படியான மற்றும் வெளிப்படையான கட்டமைப்பை அவர்களது வாடிக்கையாளர்கள் விரும்புவதுமே இதற்குக் காரணம்.

 
இக்கூட்டத்தில் ஜெயின் ஹிட்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், ஜெயின் ஹிட்ஸ் வழங்கும் சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து கேபிள் ஆபரேட்டர்களுக்கு விளக்கிக் கூறினர். DAS-க்கு முற்றிலும் இணக்கமாக இயக்கப்படும் டிஜிட்டல் கேபிள் டிவி சேவைகளை நடத்துவதற்கு உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஜெயின் ஹிட்ஸ் வழங்கும் சிக்கனமான தீர்வுகள் குறித்தும் அவர்கள் விளக்கமளித்தனர். கலந்துரையாடலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் உயர்வேகம், கிளவுட் மற்றும் ஹைபிரிட் பிராட்பேண்ட் டிவி (HBB TV) போன்ற ஜெயின் ஹிட்ஸ்-ஆல் வழங்கப்படவிருக்கிற நுகர்வோர்
பொருட்கள் மற்றும் சேவைகளின் ஒட்டுமொத்த தொகுப்பு குறித்து இன்னும் அதிகமாக அறிய உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் அதிக ஆர்வம் காட்டினர். 
 
கட்டுப்பாட்டு அறை மீதான உரிமைத்துவ நிலைதான் LCO-க்களின் முக்கிய கவலையாக இருந்தது. TRAI-ஆல் குறித்துரைத்தபடி சேவைத் தர நிலைகளின் தரத்தை (QOS) பராமரிக்கின்ற அதே வேளையில் குறைந்த செலவீனங்களில் அவர்களது சொந்தக் கட்டுப்பாட்டு அறையை அவர்கள் நிறுவிக்கொள்ளலாம் என்பதை அறிந்தபோது, கேபிள் ஆபரேட்டர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
 
தொழில்நுட்பம், சேவைகள், சேனல் தொகுப்புகள், DAS ஒழுங்குமுறை விதிகள் குறித்த LCO-க்களின் கேள்விகளுக்கும், விசாரணைகளுக்கும் ஜெயின் ஹிட்ஸ் குழுவால் தெளிவான பதில் வழங்கப்பட்டது. நாட்டில் நிலவுகின்ற டிஜிட்டல்மயமாக்கும் செயல்பாட்டையும் மற்றும் தமிழ்நாட்டில் இருக்கிற டிஜிட்டல்மயமாக்கச் செயல்பாட்டையும் ஒப்பிட்டு ஒரு சுருக்கமான கண்ணோட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒரே செயல் முயற்சியில் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் அவற்றை பயன்படுத்தும் நிலை என்பதை எட்டுவதற்கு ஆபரேட்டர்களுக்கு ஜெயின் ஹிட்ஸ் தொழில்நுட்பம் எப்படி உதவுகிறது என்பது குறித்தும் அவர்களுக்குப் புரியும் வகையில் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது. தங்களது சேவையின் உயர்திறனை நிரூபிக்கும் வகையில், அவர்களது MPEG-4 உயர்தர சிக்னல்கள் குறித்து ஒரு செய்முறை விளக்கத்தையும் ஜெயின் ஹிட்ஸ் குழு செய்து காட்டியது.
 
இக்கூட்டத்தில் உரையாற்றிய ஜெயின் ஹிட்ஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர் ஜேகே ஜெயின், பெரிய பண முதலைகளின் அச்சுறுத்தலின்கீழ் இருந்து வருகிற சிறிய மற்றும் தனிப்பட்ட உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்களின் போராட்டத்தை ஜெயின் ஹிட்ஸ் ஆதரிப்பதாக கூறினார். ஒளிபரப்பாகும் உள்ளடக்கம் மீது மட்டுமல்லாமல் வினியோக சேனல்கள் மீதும் ஏகபோகத் தனியுரிமை என்பது விரும்பத்தக்க நடைமுறை அல்ல என்றும் அவர் கூறினார். எலெக்ட்ரானிக் ஊடக உரிமைத்துவத்தில் அதிகார பரவலாக்கப்பட்ட மாதிரியை ஜெயின் ஹிட்ஸ் ஆதரிக்கிறது என்பதால் சிறிய கேபிள் ஆபரேட்டர்களுடன் கூட்டாண்மை உறவை அது மேற்கொண்டு வருகிறது என்று குறிப்பிட்ட அவர், வெளிப்படையான, ஒளிவு-மறைவற்ற தொழில்-வர்த்தக நடைமுறைகள் மீது அவரது நிறுவனம் நம்பிக்கைக் கொண்டிருப்பதாகக் கூறினர். 
 
கேபிள் ஆபரேட்டர்களுடன் கூட்டாக இத்தகைய கூட்டங்களை நடத்துவது, இத்துறையில் அக்கறையும், பங்கும் கொண்டுள்ள நபர்களோடு புரிதலையும் மற்றும் அவர்களது தொழில் அறிவுக்கூர்மையையும் மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டிருக்கிறது என்று கூறினார். தமிழ்நாடு மாநிலத்தில் ஜெயின் ஹிட்ஸின் இத்திட்டத்தால் பலன்பெறப் போகும் மிகப்பெரிய நபர், மாநில அரசாகவே இருக்கப் போகிறது. ஏனெனில், அரசு வருவாய்கள் திருடப்படுவதை இந்த அமைப்பு முறை தடைசெய்யும் மற்றும் வரி வசூலையும் மேம்படுத்தும். அத்துடன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கின்ற எண்ணற்ற நபர்கள் பின்பற்றி நடப்பதையும் அது உறுதிசெய்யும் என்று தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.
 
இளம் தொழில்முனைவோர்கள் மற்றும் கேபிள் ஆபரேட்டர்களின் உற்சாக மிக்க, துடிப்பான குழுவினர் இடம் பெற்றிருக்கும் ABCN நெட்வொர்க் (பி) லிமிடெட் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. ABCN நிறுவனத்தை, பிரத்யேகமல்லாத பிராந்திய சேவை கூட்டாளியாக ஜெயின் ஹிட்ஸ் ஏற்கனவே நியமனம் செய்திருக்கிறது. ABCN நிறுவனத்தின் தலைவரான மாரிமுத்து, 'தங்களது தொழில் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து கைவசத்தில் கொண்டிருப்பதை அனுமதிப்பதும் அதே வேளையில், டிஜிட்டல்மயமாக்குவதற்கு மிகக் குறைவான முதலீட்டு தீர்வைக் கொண்டு அவர்களது வளர்ச்சியை மேம்படுத்த வகை செய்கிறது என்பதுமே ஜெயின் ஹிட்ஸ் திட்டத்தின் முக்கிய அம்சம்," என்று கூறினார். 
 
DAS அமல்படுத்துவதற்கான இறுதித் தேதி மிக அருகில் நெருங்கி வருவதால் (செப்டம்பர் 30 மற்றும் 2014 டிசம்பர் 31) தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர்கள் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே ஹிட்ஸ் சேவை நிறுவனத்துடன் கைகோர்த்து இணைந்து செயல்படுவது அத்தியாவசியமானது என்று இக்கூட்டத்தில் கேபிள் ஆபரேட்டர்களிடம் ABCN நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரான நாசிர் அலி தெரிவித்தார்.
 
நிறுவனத்தில் ஏற்கனவே LCO கூட்டாளியாக இருந்துபவர்கள் அவர்களது அனுபவத்தையும் மற்றும் ஜெயின் ஹிட்ஸ் உடன் தொழில் செய்வதில் கிடைக்கும் ஆதாயங்களையும் பகிர்ந்துகொண்ட இக்கூட்டத்தில் புதிய கூட்டாண்மை வாய்ப்புகளை பரிசீலனை செய்கிற புதிய கேபிள் ஆபரேட்டர்களும் ஏராளமாகக் கலந்துகொண்டது இக்கூட்டத்தை வெற்றிகரமானதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்கியது. பிரத்யேக தள்ளுபடிகள் மற்றும் சலுகைத் திட்டங்கள் சிலவற்றை அறிமுகம் செய்ய இந்தத் தளத்தை இந்நிறுவனம் சரியாகப் பயன்படுத்திக்கொண்டது. மிகப் பெரிய சந்தாதாரர் அடித்தளத்தை உறுதி செய்கின்ற ஆபரேட்டர்களுக்கு சில பிரத்யேக சலுகைத் திட்டங்களையும் இவ்வேளையில் அது வழங்கியது.
 
முழுமையாக DAS இணக்கமான டிஜிட்டல் கேபிள் டிவி சேவைகளை அதன் சந்தாதாரர்களுக்கு வழங்குவதற்கு குறைவான செலவில் உயர்தரமான தீர்வுகளை ஜெயின் ஹிட்ஸ் வழங்குகிறது. உயர்வேக பிராட்பேண்ட் சேவை, மல்டி ஸ்கிரீன் மற்றும் இன்னும் பல மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளையும் இது வழங்குகிறது. அதே நேரத்தில், கிளவுட் பிராட்பேண்ட், ஹைபிரிட் பிராட்பேண்ட் டிவி (HBB TV) போன்ற நுகர்வோர் பொருட்களையும் இது சேர்த்து தருகிறது. தற்போது, அனைத்து முக்கிய கட்டண டிவிக்கள் உட்பட 250-க்கும் அதிகமான சேனல்களை வழங்கி வருகிற ஜெயின் ஹிட்ஸ், விரைவில் முழு ஹெச்டி மற்றும் மல்டி ஸ்கிரீன் சேவையையும் நுகர்வோர்களுக்கு விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. 
 
டிஸ்னி, கார்டூன் நெட்வொர்க், போகோ, டிஸ்கவரி, ஹிஸ்டரி டிவி18, அனிமல் பிளானெட் மற்றும் நிக்கலோடியான் என்ற ஏழு சேனல்களுக்கு இரட்டை ஆடியோ ஃபீட் சேவையை ஜெயின் ஹிட்ஸ் தற்போது வழங்கி வருகிறது. உலகின் முதன்மையான தொழில்நுட்ப நிறுவனமான ARRIS (முன்பு மோட்டோரோலா ஹோம் என அழைக்கப்பட்ட) மற்றும் உலகின் மிகப்பெரிய சேட்டிலைட் நிறுவனமான இன்டல்சாட் ஆகியவற்றோடு கூட்டாண்மையாக செயல்படுகிறது. மிகக் குறைந்த செலவில் LCO-ஐ MCO-வாக மாற்றுவதும் மற்றும் டிஜிட்டல் கேபிள் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளுக்கு தொடக்கத்திலிருந்து இறுதிவரை முழுமையான சேவைகளை வழங்குவதுமே ஜெயின் ஹிட்ஸ் திட்டத்தின் முக்கிய அம்சமாகும். 2014ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவெங்கும் 3000-க்கும் அதிகமான மினி டவுன்லிங் ஹெட்என்டு அமைப்புகளை நிறுவுவதற்கு ஜெயின் ஹிட்ஸ் இதன் வழியாகத் தயாராக இருக்கிறது. தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் இத்திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றும்.
 
இதனை ஜெயின் ஹிட்ஸ் நிறுவனத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்