உலகின் பொருதாரவளர்ச்சி பெற்ற நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்து பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்திருக்கிறது.
மேலும், இந்தியா இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சியை முறியடித்து முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 6 முதல் 8 சதவீதம் வரையிலான வளர்ச்சியை காணும். ஆனால் இங்கிலாந்து பொருளாதாரம் 1 முதல் 2 சதவீத வளர்ச்சியை மட்டுமே அடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.