வீடு, வாகன கடனுக்கான வட்டி குறைப்பு: இந்தியன் வங்கி அறிவிப்பு

செவ்வாய், 20 அக்டோபர் 2015 (09:47 IST)
வீட்டுக் கடன் மற்றும் வாகன கடனுக்கான வட்டி குறைக்கப்படுவதாக இந்தியன் வங்கி பொதுமேலாளர் எம்.நாகராஜன்  அறிவித்துள்ளார்.


 

 
வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் குறைத்தது.
 
வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தயடுத்து தனிநபர் கடன், வாகன கடன், வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதங்களை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில், வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டியை குறைப்பதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.
 
இது குறித்து சென்னை வடக்கு மண்டல மேலாளர் மற்றும் பொதுமேலாளர் எம்.நாகராஜன் கூறியிருப்பதாவது:-

திருவிழா காலத்தை கொண்டாடும் வகையில் இந்தியன் வங்கி வீட்டுக்கடன் வட்டியை மிகவும் குறைவாக 9.65 சதவீதம் ஆகவும், வாகன கடன் வட்டியை 10 சதவீதம் ஆகவும் குறைத்துள்ளது.
 
மேலும் ரூ.75 லட்சம் வரையிலான வீட்டு கடன்களுக்கு பரிசீலனை கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 
வாகன கடன்களுக்கு பரிசீலனை கட்டணம் 50 சதவீதம் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வாய்ப்பை பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்