வட்டி தொழிலாக மாறும் ஏர்டெல் நிறுவனம்!!

செவ்வாய், 17 ஜனவரி 2017 (13:35 IST)
பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் கோடாக் மகேந்திரா வங்கியும் இணைந்து 250,000 ஏர்டெல் பேமெண்ட் வங்கி சேவை மையங்களை அமைக்க உள்ளன. 


 
 
இதன் முதல் கட்டமாக 1 மில்லியன் வாடிக்கையாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
பேமெண்ட் வங்கிகள் பிற வங்கிகளுடன் ஒப்பிடும் போது சற்று வித்தியாசமானவை. பேமெண்ட் வங்கிகளில் சேமிப்புக் கணக்குகள் மட்டுமே துவங்க முடியும். அதுமட்டும் இல்லாமல் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பு வைக்க முடியும். 
 
அதிக வட்டி:
 
ஏர்டெல் பேமெண்ட் வங்கிகளில் பணத்தை டெப்பாசிட் செய்ய எந்தக் கட்டணமும் இல்லை.
ஆனால், 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை பணத்தை எடுக்க 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
 
இதுவே 4000 ரூபாய்க்கும் அதிகமாகப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் 0.65 சதவீதம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அதாவது 1000 ரூபாய் எடுக்க 65 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
 
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குகளுக்கு இடையில் பணத்தைப் பரிமாற்ற கட்டணம் ஏதும் இல்லை. ஆனால், பிற வங்கி கணக்குகளுக்குப் பணத்தை அனுப்ப வேண்டும் என்றால் 0.5 சதவீதம் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
 
அதே நேரத்தில் வங்கி சேவை மையங்களில் இருந்து பிற வங்கி கணக்கிற்குப் பணத்தை அனுப்ப வேண்டும் என்றால் 1 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.
 
ஏர்டெல் பேமெண்ட் வங்கி கணக்கை திறக்க 100 ரூபாய் கட்டணமும், வங்கி கணக்கை மூட 50 ரூபாய் கட்டணமாகவும் செலுத்த வேண்டும். வங்கி கணக்கில் குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் 49,990 ரூபாய் வரை ஒரே நேரத்தில் டெப்பாசிட் செய்யலாம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்