தனியார் இ-வாலட்களுக்கு போட்டியாக களமிறங்கும் அரசு இ-வாலட்!

வியாழன், 8 டிசம்பர் 2016 (10:12 IST)
ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில், தனியார் இ-வாலட்களுக்கு போட்டியாக அரசு சார்பில் இ-வாலட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


 
 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு இ-வாலட் பயன்பாடு அதிகரித்துள்ளது. Paytm, MobiKwik, Freecharge போன்ற மொபைல் அப்ளிகேஷன்களை உபயோகிப்பவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. 
 
இணைய வர்த்தக நிறுவனங்கள் பலவும் இதனால் லாபம் அடைந்து வருகின்றன. மக்களுக்கு உதவும் விதமாக மொபைல் வால்ட்களில் சேவை வரி தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.
 
இந்நிலையில், ஆந்திரப் பிரதேச அரசு ஏபி பர்ஸ் (AP Purse) என்ற மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. அதில் 13 மொபைல் பேங்கிங் அம்சங்களும் 10 மொபைல் வாலட் அம்சங்களும் உள்ளன.
 
மகாராஷ்டிர அரசும் இதே போன்ற புதிய இ-வாலட் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்