லோன் வேண்டுமா? ஃபேஸ்புக் இருந்தால் போதும்

வெள்ளி, 4 நவம்பர் 2016 (14:35 IST)
ஃபேஸ்புக் கணக்கை சரியாக பராமரித்தால் உங்களுக்கு உடனடியாக கடன் வழங்கப்படும். இந்த சேவை முக்கியமாக கார்ப்ரேட் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.


 

 
இன்றைய இளைய தலைமுறையினர் கிரேடிட் கார்டு பயன்படுத்துவது சாதாரண ஒன்றாகும். இந்நிலையில் வங்கியில் கடன் பெறுவது என்பது சுலபமான காரியம் கிடையாது.
 
ஒவ்வொரு வங்கியிலும், அவர்கள் தங்களுக்கென தனி அடிப்படை விதிகள் கடைப்பிடிப்பார்கள். அதைக்கொண்டு தான் வங்கி கடன் அளிக்கப்படும். இதனால் வங்கி கடன் பெறுவது மிகவும் கடினமானதாக உள்ளது.
 
ஃபேஸ்புக் கணக்கை சரியாக பராமரிப்பவர்களுக்கு எளிதாக கடன் வழங்குகிறது CASHe என்னும் ஆப். இந்த CASHe ஆப் மூலம் ஃபேஸ்புக் கணக்கை லாக் இன் செய்து விவரங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
 
பின்னர் நமது ஃபேஸ்புக் கணக்கை ஆய்வு செய்து நமக்கு கடன் அளிக்கிறது. இதன் வட்டி விகிதம் அதிகம் தான். பெறும் கடன் தொகைக்கு 30% வட்டி வசூலிக்கப்படுகிறது. 
 
ஃபேஸ்புக் கணக்கை ஆய்வு செய்த பின் வங்கியின் விவரங்கள் குறித்து தகவல் அளிக்க வேண்டும். பின்னர் உடனடியாக வங்கி கணக்கில் கடன் தொகை அளிக்கப்படும்.
 
இதுகுறித்து CASHe செயலி நிறுவனத்தின் தலைவர் ரமண குமார் கூறியதாவது:-
 
ஒருவர் கிரேடிட் கார்டு வாங்கவில்லை என்றால். அவர் நம்பத் தகுந்தவராக இருக்கமாட்டார் என்பது முற்றிலும் முறையற்றது. இதன் அடிப்படையில் தான் CASHe நிறுவனம் உருவானது.
 
வருகிற ஜனவரி மாதம் முதல் சமூக வலைதளத்தின் பயன்பாட்டின் படி ஒருவரின் கிரேடிட் ரேடிங் மதிக்கப்படும் முறையை அறிமுகம் செய்யவுள்ளோம், என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்