டெலிவரி பாய்ஸ்க்கு பாதுகாப்பு ஆப்: பிளிப்கார்ட் அதிரடி

புதன், 18 ஜனவரி 2017 (17:43 IST)
கடந்த மாதம் பெங்களூரு நகரில் பிளிப்கார்ட் டெலிவரி பாய் கொலை செய்யப்பட்டதை அடுத்து அந்நிறுவனம் டெலிவரி பாய்ஸுக்காக பாதுகாப்பு அம்சம் கொண்ட ஆப் ஒன்றை இறந்தவரின் பெயரில் வெளியிட்டுள்ளது.



கடந்த மாதம் பெங்களூரு நகரில் வருண் குமார் என்பவர் பிளிப்கார்ட் டெலிவரி பாய் நஞ்சுண்ட சுவாமி என்பவரை கொலை செய்துவிட்டு பொருளை எடுத்துக்கொண்டார். இதனால் நாடு முழுவதும் டெலிவரி பாய்ஸின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

நாடு முழுவதும் மக்களிடையே ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் ஆர்வம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், டெலிவரி பாய்ஸின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களது பாதுகாப்புக்கு எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லை.

இந்நிலையில் தற்போது பிளிப்கார்ட் நிறுவனம் டெலிவரி பாய்ஸ் பாதுகாப்புக்காக இறந்தவர் பெயரில் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கு இணையதளம் அவசியமில்லை. மொபைல் நெட்வோர்க் மூலமாக இயங்கக்கூடியது. இதன்மூலம் அவர்கள் இருக்கும் இடம் மற்ற டெலிவரி பாய்ஸ் மற்றும் இன்சார்ஜ் ஆகியோருக்கு தெரிந்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்