ஓரியண்டல் காமர்ஸ், தேனா வங்கிகளைத் தடயவியல் தணிக்கை செய்ய உத்தரவு

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (13:22 IST)
பொதுத் துறை வங்கிகளான ஓரியண்டல் காமர்ஸ் வங்கி, தேனா வங்கி ஆகியவற்றின் நிதிச் செயல்பாடுகளைத் தடயவியல் தணிக்கை செய்ய, மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 
ஓரியண்டல் காமர்ஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த 80 கோடி ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையையும் தேனா வங்கியில் வைத்திருந்த 256 கோடி ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையையும் முறைகேடாகப் பயன்படுத்தியதாக வந்த செய்திகளை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 
இது குறித்து, மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதித் துறைச் செயலர் ஜி.எஸ். சாந்து, இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஊழியர்கள் சிலரைத் தற்காலிகப் பணிநீக்கமும் இடமாற்றமும் செய்துள்ளதாகவும் கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்