யார் நம்பர் ஓன்?: அடித்துக்கொள்ளும் ஜியோ மற்றும் ஏர்டெல்!!

திங்கள், 17 ஜூலை 2017 (13:48 IST)
இந்தியாவில் அதிவேக இன்டர்நெட் சேவையை அளிப்பது ஏர்டெல் என்று அந்நிறுவனம் விளம்பரங்கள் மூலம் தெரிவித்து வருகிறது. 


 
 
ஆனால், ரிலையன்ஸ் ஜியோ கடந்த சில மாதங்களாக அதிகபட்ச வேகத்துடன் இன்டர்நெட் சேவை அளிப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
 
எனவே, விளம்பரங்களில் ஏட்டெல் நிறுவனம் தவறான பிரசாரங்கள் செய்வதாக ஜியோ புகார் அளித்திருந்தது. மேலும், ஏர்டெல்-லின் இந்த விலம்பரம் ஜியொ சேவையை பாதிக்கும் வகையில் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
 
ஆனால், ஏர்டெல் நிறுவனம் ஜியோவின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது. இலவசங்கள் என்ற கண்துடைப்பின் மூலம் ஜியோ ஏர்டெல் வாடிக்கையாளர்களை தன்வசபடுத்துகிறது எனவும் கூறியுள்ளனர்.
 
இந்நிலையில், ஜியோ மீண்டும் 204, 406, 420, 465, 499 மற்றும் 120 (பி) ஆகிய சட்டங்களீன் அடிப்படையில் தனது வழக்குகளை உறுதியாக்கியுள்ளது. 
 
ஏர்டெல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கு சிறை தண்டனை மற்றும் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்