டெராகிராப்: நொடிக்கு 40 ஜிபி வேகத்தில் இன்டர்நெட்!

Webdunia
புதன், 23 மே 2018 (11:41 IST)
தற்போது இணைய சேவை என்பது அனைவருக்கும் எளிதான ஒன்றாகிவிட்டது. பேஸ்புக் நிறுவனம் இன்டர்நெட் வசதியை கட்டமைக்க பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. 
 
இந்த ஆய்வுகளின் பலனாக பேஸ்புக் நிறுவனம் டெராகிராப் என்னும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. டெராகிராப் தொழில்நுட்பம் மில்லிமிட்டர் வேவ்லென்த் 60 ஜிகாஹெர்ட்ஸ் வயர்லெஸ் அமைப்பு ஆகும். 
 
இது வழக்கமான வயர்லெஸ் தொழில்நுட்பத்தை விட அதிவேக இணைய வசதியை வழங்கும். இதன் மூலம் 60 ஜிகாஹெர்ட்ஸ் பிராட்காஸ்ட் உபகரணங்களை உற்பத்தியாளர்கள் உருவாக்க முடியும். 
 
பேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து புதிய தொழில்நுட்பத்துக்கான சோதனைகளை 2019 ஆம் ஆண்டின் மத்தியில் துவங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 
 
இந்த தொழில்நுட்பம் மூலம் நொடிக்கு 20 முதல் 40 ஜிபி வரையிலான வேகத்தை வழங்கும். மேலும், பெரிய ஆன்டெனா, சேனல் பான்டிங் போன்ற பல்வேறு அம்சங்களை பயன்படுத்தி இணைய பரப்பளவு மற்றும் வேகத்தை அதிகரிக்க பேஸ்புக் மற்றும் குவால்காம் திட்டமிட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்