ஈரோட்டில் கதளி வாழை விலை அதிகரிப்பு

திங்கள், 9 பிப்ரவரி 2015 (16:02 IST)
ஈரோடு மாவட்டத்தில்நடந்த வாழை ஏலத்தில் கதளி வாழையின் வரத்து குறைந்ததாலும் இதனால் வியாபாரிகள் போட்டி அதிகரித்ததாலும் அதன் விலை அதிகரித்துளளது.


 
ஈரோடு மாவட்டத்தில் பத்தாயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். குறிப்பாக அந்தியூர், பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிருக்கு முக்கியதுவம் கொடுத்துள்ளனர். 
 
இப்பகுதியில் விளையும் வாழைகள் தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஏலம் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
 
இந்த ஏலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, கர்நாடக ஆகிய பகுதிகளில் இருந்தும் வாழை வியாபாரிகள் அதிகமாக வந்து விவசாயிகள் உற்பத்தி செய்த வாழைகளை ஏலம் முறையில் வாங்கிச் செல்வார்கள்.
 
கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.35க்கு விற்பனையான கதளி வாழை நேற்று வரத்து குறைவாக வந்தது. இதனால் வியாபாரிகள் போட்டி அதிகமானதால் நேற்று கதளி வாழை கிலோ ஒன்று ரூ.38 வரை விற்பனையானது.
 
மற்ற வாழைகளும் கடந்த வாரத்தை காட்டிலும் சிறிதளவு கூடுதல் விலைக்கு ஏலம்போனது.
 
தேன் வாழை தார் ஒன்று ரூ.560 வரையிலும், செவ்வாழை தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.600 வரையிலும் விற்பனையானது. நேந்திரம் கடந்த வாரம் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.1க்கு விற்பனையானது.
 
நேற்று இதைவிட கிலோ ஒன்றுக்கு ரூ. 2 குறைந்து கிலோ ஒன்று ரூ. 19 க்கு விற்பனையானது. மொத்தம் நேற்று நடந்த ஏலத்தில் ரூ.7 லட்சத்திற்கு வாழை விற்பனையானது குறிப்பிடதக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்