5 ஆயிரம் டன் துவரம் பருப்பு இறக்குமதி: மத்திய அரசு முடிவு

புதன், 6 ஜனவரி 2016 (09:43 IST)
பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த 5 ஆயிரம் டன் துவரம் பருப்பை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


 

 
பருப்புவகைகளின் விலை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அதிக அளவில் உயர்ந்தது. பருப்பு வியாபாரிகள், பருப்பை பதுக்கி வைத்து, செயற்கையான விலை ஏற்றத்துக்கு வழிவகுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
 
இந்நிலையில், மீண்டும் பருப்பு விலை உயரும் என்று கூறப்படுகின்றது. எனவே, விலை உயர்வு தொடர்ந்து நீடிப்பதால், இதை கட்டுப்படுத்தும் வகையில் 5 ஆயிரம் டன் துவரம் பருப்பை இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.
 
இந்த டெண்டர் பணிகள் நிறைவடைந்து பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் மார்ச் 15 ஆம் தேதிக்குள் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகம் மற்றும் சென்னை துறைமுகத்திற்கு துவரம் பருப்புகள் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்