ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,422-க்கும் சவரன் ரூ.19,376-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தங்கத்தின் விலை 20,000 ரூபாய்க்கு கீழே செல்ல தொடங்கியது. அதனை தொடர்ந்து நவம்பர் 1 ஆம் தேதி ரூ.19,760-ஆகவும், நவம்பர் 2 ஆம் தேதி இந்த விலையில் 88 ரூபாயும், நவம்பர் 4 ஆம் தேதி 16 ரூபாயும் குறைந்து இருந்தது. இன்று தங்கத்தின் விலை மேலும் அதிரடியாக குறைந்துள்ளது.