அதைத்தொடர்ந்து தற்போது சிறு சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தையும் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் அரசின் பத்திரங்களின் வருவாயைப் பொருத்து சிறிதளவு மாறிக்கொண்டே இருக்கும். கடந்த சில வருடமாக அரசு பத்திரங்கள் லாபத்தில் குறைவை சந்தித்துள்ளது.