புதிய தொழில் தொடங்க வேண்டுமா?

வியாழன், 22 டிசம்பர் 2016 (10:23 IST)
புதிய தொழில் தொடங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு அதனை எளிதாக்கும் முறைகளை மத்திய அரசு அலோசித்து வருகிறது.


 
 
தொழில் தொடங்குவதற்கான சிறந்த நாடுகள் பட்டியலில் 50 நாடுகளுக்குள் இடம் பெறும் வகையில் மத்திய அரசு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
இதற்கேற்ப தொழில் தொடங்குவதற்கான அனுமதியை நான்கு நாட்களுக்குள் வழங்க விதிகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. 
 
உலக வங்கியில் பட்டியல்படி 190 நாடுகளில், தொழில் தொடங்க எளிதான நாடுகள் வரிசையில் இந்தியா தற்போது 130-வது இடத்தில் உள்ளது. 
 
நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் தொடர்பான அனுமதிகளை ஆன்லைன் மூலம் ஒரே இடத்தில் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
 
பான் / டின் எண், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் காப்பீடு தொடர்பான அனுமதியை ஆன்லைன் மூலம் அளிக்க ஆலோசிக்கப்படுகிறது.
 
தற்போது தொழில் தொடங்குவதற்காக அனுமதி பெற குறைந்தபட்சம் 3 வாரங்களாவது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்