வங்கி கணக்குடன் ஆதார் லிங்க்: துண்டிக்கலாமா? வேணாமா?

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (14:39 IST)
ஆதார் எண் வழக்கில் தீர்ப்பு வெளியாகியது. அதில் ஆதார் முக்கியமான ஆவணம்தான் ஆனால் அதனை வங்கி கணக்கிற்கும், சிம் கார்ட்டிற்கும் கட்டாயமாக்க கூடாது என உத்தரவிட்டது. 
 
மேலும், இன்னும் ஆறு மாதத்தில் டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆதார் எண் இணைப்பினை துண்டிப்பதற்கான வழிமுறைகளை செய்துமுடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு வேலைக்காகும் என்பது கேள்விகுறியே.
 
அப்படி நம்பிக்கை இல்லாதவர்கள் இடைப்பட்ட காலத்தில் ஆதார் இணைப்பில் இருந்து வெளியேற வங்கி மற்றும் டெலிகாம் நிறுவனங்களின் சேவை மையத்தினை தொடர்பு கொண்டு இணைப்பினை நீக்கவும் கோரலாம். 
 
ஆனால் இதில் சில சிக்கலும் உள்ளது. அதாவது, அரசு நல திட்டங்கள், எரிவாயு மானியம், செயலிகளில் பணபரிமாற்றம், பான் கார்டு, வருமான வரி தாக்கல் ஆகிய அனைத்திலும் ஆதார் மற்றும் வங்கி கணக்கும் முக்கியமானதாக உள்ளது. 
 
எனவே, ஏற்கனவே செய்த இணைப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தமால், தேவையான போது ஆதாரை ஆவணமாக பயன்படுத்திக்கொள்வதே தற்போதைய சூழ்நிலைக்கு சரியான தீர்வாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்