மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகள் - அசோக் லேலேண்ட் தயாரிக்கிறது

சனி, 18 அக்டோபர் 2014 (16:57 IST)
கனரக வாகனங்கள், வணிக வாகனங்கள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் அசோக் லேலேண்ட் நிறுவனம், மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை இந்தியாவில் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் அந்நாட்டு அரசு நிதி உதவியுடன் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 'ஒப்டரே' என்ற மின்சாரத்தில் இயங்கும் பேருந்தை வடிவமைத்து வெற்றியும் கண்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் "பஸ் எக்ஸ்போ" கண்காட்சியில் இப் பேருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்தப் பேருந்துகளை இந்தியாவில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக ராஜஸ்தானிலும் தமிழகத்தின் திருச்சியிலும் தொழிற்சாலையைத் தொடங்க இருப்பதாகவும் இந்நிறுவனம் கூறியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்