சுவிஸ் நாட்டு வங்கி கணக்கு: தெரிஞ்சிக்கோங்க!!

வெள்ளி, 11 நவம்பர் 2016 (12:23 IST)
உலகிலேயே வங்கிக் கணக்கு வழக்குகளை ரகசியமாக வைத்துக்கொள்ள மிகவும் உகந்த மற்றும் பாதுகாப்பான வங்கிகள் என்றால் அது சுவிஸ் நாட்டு வங்கிகள் தான்.

 

 
 
அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள், சமூக விரோதிகள் மற்றும் சில அரசு அதிகாரிகள் சுவிஸ் வங்கியில் கணக்குகள் வைத்திருப்பது இவ்வங்கிகளில் இருக்கும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள். 
 
சுவிஸ் வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்கள் குறித்த எந்த ஒரு விபரத்தையும் அளிக்காது. 
 
வங்கி கணக்கு:
 
18 வயதை அடைந்த யார் வேண்டுமானாலும் சுவிஸ் வங்கியில் கணக்கைத் துவக்கலாம். 
 
எனினும், வங்கியின் பெயருக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயமான செயல்களைச் சுவிஸ் வங்கிகள் கடுமையாகத் தவிர்க்கிறது. 
 
ஆவணங்கள்:
 
ஆவணங்களைப் பொறுத்தவரை மற்ற வங்கிகளில் கணக்குத் துவங்குவதற்கும் சுவிஸ் வங்கிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. 
 
மற்ற வங்கிகளைப் போலவே ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவேண்டும். எனினும், இது தொடர்பான ஆவணங்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கடுமையாகவும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். 
 
ஆன்லைனில் கணக்கு:
 
சுவிஸ் வங்கிகள் மிகுந்த கெடுபிடிகளைக் கொண்டுள்ளதால்,  வங்கியை நேரில் அணுகாமல் ஆன்லைனில் கணக்கைத் துவக்க இயலாது.
 
பாதுகாப்பு: 
 
வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பாதுகாப்பதில் மிக கவனமாக செயல்படும். ஆனால், சமூக விரோத செயல்கள் மற்றும் வரி ஏய்ப்பு விவகாரங்களில் இந்த விதிகள் விலக்கப்படும்.
 
ஒருவர் தன் சுவிஸ் வங்கிக் கணக்கை எந்தக் கட்டுப்பாடும் கட்டணமும் இன்றி எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடதக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்