நான்கு புதிய இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது பஜாஜ் நிறுவனம்

வெள்ளி, 23 அக்டோபர் 2015 (18:28 IST)
இரு சக்கர வாகனத் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி  நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் புதிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்யிருகிறது.


 


பஜாஜ் நிறுவனத்தின் அவெஞ்சர் வகை பைக்கில் புதிய ரகத்தை அறிமுகம் செய்வதுடன், புதிய 3 மோட்டார் சைக்கிள் ரகங்களை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் முடிவு  செய்துள்ளது.

புதிய வகை இரு சக்கர வாகனத்தின் மூலம் இந்திய பங்குச் சந்தையில் தற்போதுள்ள 19 சதவீதப் பங்கை 22 சதவீதமாக அதிகரிக்க எங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று பஜாஜ் நிறுவனத்தின் சந்தையிடல் பிரிவுத் தலைவர் எஸ். ரவிகுமார் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்