ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா பெறுவது எப்படி??

திங்கள், 10 அக்டோபர் 2016 (17:25 IST)
ஒரே ஒரு எஸ்எம்எஸ் அனுப்புவதில் மூலம் 1.2 ஜிபி அளவிலான 4ஜி/3ஜி இலவச டேட்டா பெற முடியும் என ஏர்டெல் நிற்வனம் அறிவித்துள்ளது. 

 
வழிமுறைகள்:
 
முதலில், மைஏர்டெல் (Myairtel), வின்க் மியூசிக் (Wynk), வின்க் திரைப்படங்கள், வின்க் கேம்ஸ் ஆகியவைகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அப்படியாக ஒவ்வொரு ஆப்பும் 300எம்பி அளவிலான தரவை வழங்கும்.
 
இதில் உள்ள ஏதேனும் ஒரு இணைப்பை அணுகி ஆப் டவுன்லோட் லின்ங்-க்கை பெறவும்.
குறிப்பிட்டுள்ள தளத்தில் நுழைந்த பின்னர், 'எஸ்எம்எஸ் பெறுவதற்கான இணைப்பை பெற' என்பதை காணும் வரை ஸ்க்ரோல் செய்யவும்.
 
பின்னர் மொபைல் எண்ணை வழங்கி அந்த டவுன்லோட் இணைப்பை பெற்றுக் கொள்ளவும்.
கிடைக்கப்பெற்ற இணைப்பை கொண்டு நான்கு பயன்பாடுகளையும் பதிவிறக்கம் செய்யவும்.
 
ஒருமுறை கூறப்பட்டுள்ள 4 பயன்பாடுகளையும் பதிவிறக்கம் செய்துவிட்டால், இலவசமாக 1.2ஜிபி அளவிலான 4ஜி/3ஜி தரவு வழங்கப்படும்.
 
குறிப்பு: 
 
இந்த 1.2 ஜிபி அளவிலான தேர்வானது ஒவ்வொரு மாதத்திற்கும் 100 எம்பி என 3 மாதங்களுக்கு, பேலன்ஸில் வரவு வைக்கப்படும். 

வெப்துனியாவைப் படிக்கவும்