IPL க்கு பயந்து சம்பள பாக்கியை வழங்கியது கிங்பிஃஷர்

புதன், 3 ஏப்ரல் 2013 (13:07 IST)
FILE
டெல்லியில் ஐ.பி.எல். உறுப்பினர்கள் தங்கியுள்ள ஹோட்டல்கள் மற்றும் போட்டி நடைபெறும் இடங்களிலும் போராட்டம் நடத்துவோம் என்று கிங்பிஃஷர் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியதால், தனது நிறுவனத்தில் பணியாற்றிய 2,000 ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பள பாக்கியை கிங்பிஷர் வழங்கியுள்ளது.

கிங்பிஃஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, கடந்த அக்டோபர் மாதம் முதல் தனது நிறுவன விமானங்களின் பறக்கும் உரிமைகளை இழந்து, அந்நிறுவனத்தின் விமானங்கள் தரையிறக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்நிறுவனம் இன்றுவரை வங்கிகள், நிறுவன ஊழியர்கள், விமானநிலையங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கவேண்டிய தொகை 2.5 பில்லியன் டாலர் அளவுக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தங்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத் தொகைகளை வழங்காவிட்டால், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை கிங்பிஃஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையா வைத்திருப்பதால், டெல்லியில் ஐ.பி.எல். உறுப்பினர்கள் தங்கியுள்ள பகுதிகளிலும் மற்றும் நாளை போட்டி நடைபெறும் இடங்களிலும் போராட்டம் நடத்துவோம் என்று கிங்பிஃஷர் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியதால், தனது நிறுவனத்தில் பணியாற்றிய 2,000 ஊழியர்களுக்கு இன்று நிலுவையில் இருந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்துக்கான சம்பளத் தொகையை வழங்கியது.

வெப்துனியாவைப் படிக்கவும்