வீடுகளில் உள்ள பயன்படுத்திய பொருட்களின் மதிப்பு ரூ:78,300 கோடி: ஓ.எல்.எக்ஸ். ஆய்வு தகவல்
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (18:06 IST)
இந்தியாவில் உள்ள வீடுகளில் ரூ:78,300 கோடி மதிப்பிலான பயன்படுத்திய பொருட்கள் உள்ளன என்று ஓ.எல்.எக்ஸ். நிறுவனம் ‘கிரஸ்ட்’ என்ற ஆய்வு நடத்தியன் மூலம் தெரிவித்துள்ளது.
பழைய, பயன்படுத்திய பொருட்களை விறப்னை செய்வதற்கும், வாங்குவதற்கும் இணையதளம் மூலம் வழி வகுத்து சேவையை வழங்கி கொண்டிருக்கிறது ஓ.எல்.எக்ஸ். நிறுவனம்.
பழைய பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்வதில் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய 'கிரஸ்ட்' என்ற ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டதாவது:-
அதிக அளவிலான பொருட்களை வாங்கி குவிப்பது அனைவரிடமும் பழக்கமாக மாறிவிட்டது. புதிய பொருட்கள் வாங்கிய சில நாட்களுக்குள்ளே சலிப்படைந்து விடுவதும், புதிய பொருட்களை மட்டுமே கையில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணமும், மனோபாவமும் தான் பழைய, பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்ய தூண்டுகிறது.
ஒவ்வொரு வீடுகளிலும் சராசரியாக பழைய பயன்படுத்திய 12 உடைகள், 14 சமையல் பாத்திரங்கள், 11 புத்தகங்கள், 2 மொபைல் போன்கள் மற்றும் 3 கைக்கடிகாரங்கள் தேங்கிக் கிடக்கிறது.
இந்தியா முழுவதும் உள்ள வீடுகளில் ரூ.78,300 கோடி மதிப்பிலான பயன்படுத்திய பொருட்கள் தேங்கியுள்ளன. பழைய பொருட்களை வீடுகளில் தேக்கி வைப்பதிருப்பதில் டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.