3ஜி வருவாயால் நிதிப் பற்றாக்குறை குறைந்தது!

புதன், 1 செப்டம்பர் 2010 (20:34 IST)
மூன்றாவது தலைமுறை தகவல் தொடர்பு (3ஜி) தொழில்நுட்பத்திற்கு ஒலி அலைக்கற்றை ஏலம் விட்டதிலும், கம்பியில்லா அகண்ட அலைவரிசைத் தொடர்புகளை விற்றதிலும் கிடைத்த வருவாயால் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 23.8 விழுக்காடு குறைந்துள்ளது!

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 3ஜிக்கு ஒலி அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலம் + கம்பில்லா அகண்ட அலைவரிசைத் தொடர்பு விற்றதில் மட்டும் ரூ.1.06 இலட்சம் மத்திய அரசிற்கு வருவாய் கிடைத்துள்ளது. இதில் 3ஜி ஏலத்தில் மட்டும் கிடைத்தது ரூ.90,915 கோடி ஆகும்.

இது ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறையான ரூ.3,81,408 கோடியில் 23.8 விழுக்காடாகும்.

இதேபோல் மறைமுக வருவாய் மூலம் மத்திய அரசிற்கு எதிர்பார்க்கப்பட்ட வரி வருவாயில் முதல் காலாண்டிலேயே 84.9 விழுக்காடு (ரூ.1,25,703 கோடி) வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் வருவாய் 13.6 விழுக்காடுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்