வெங்காயத்தின் விலை குறைகிறது

வியாழன், 8 அக்டோபர் 2015 (17:48 IST)
வெங்காயத்தின் விலை கடந்த சில மாதங்களாக அதிகரித்தது. டெல்லியில் 1 கிலோ வெங்காயம் 100 ரூபாய் வரை விற்றது. இந்த விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த  2 ஆயிரம் டன் வெங்காய இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதித்தது.
 
இதன்படி, நேற்று 2 ஆயிரம் டன்களில் முதலாவதாக 250 டன் வெங்காயம் இந்தியாவிற்கு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய உணவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 250 டன் வெங்காயம் தற்போது இறக்குமதி ஆகியுள்ளது, இந்த வார இறுதிக்குள் மீதமுள்ள 1,750 டன் வெங்காயம் வந்து சேரும் என்று அறிவித்துள்ளது.
 
இதனால், வெங்காயத்தின் விலை நாடு முழுவதும் விரைவில் குறையும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.மேலும், பருப்புகள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் 5 ஆயிரம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இதுவரை சென்னை மற்றும் மும்பை வழியாக 3,223 டன் பருப்பு வந்து சேர்ந்திருப்பதாகவும், மீதமுள்ள பருப்பை வருகிற 20 ஆம் தேதிக்குள் வந்து விடும் என்றும் உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை விரைவில் குறையும் என்றும் அமைச்சகம்  கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்